விமல் விரவன்சவால் 09 கோடிக்கும் அதிகமான நட்டம்

0
162

உள்ளக கணக்காய்வு அறிக்கையின்படியே விமல் வீரவன்ச நேற்று கைது செய்யப்பட்டதாகவும், அவர் 09 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

40 வாகனங்கள் முலம் இந்த நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவை வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் கடுமையான வரட்சி நிலவிய போதிலும் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என்றும் மின்சாரப் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக உரையாற்றும் போது,

தகவலறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அது 06 மாத காலத்திற்குள் செயற்படுத்தப்பட வேண்டும். இது நாட்டுப் பிரஜை என்ற வகையில் பெற்ற வெற்றி என்று கூறினார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற மாட்டாது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY