மஹிந்த அரசைப் போல் மக்­களை அடித்து துரத்தி காணிகள் அப­க­ரிக்­கப்­ப­ட­வில்லை: அரச காணி­யிலேயே அபி­வி­ருத்தி என்­கிறார் முஜிபுர் ரஹ்மான்

0
103

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கொழும்பில் தமிழ் , முஸ்­லிம்­களை அடித்து துரத்தி காணி­களை கையகப் படுத்­தி­ய­துபோல் ஹம்­பாந்­தோட்­டையில் நல்­லாட்சி அரசு காணி­களை சுவீ­க­ரிக்­க­வில்லை.

அரச காணி­க­ளி­லேயே அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம் என கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்தி குழு இணைத் தலை­வரும் எம்.பி.யுமான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அத்­துடன், பிர­யோ­ச­ன­மற்று கிடக்கும் ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை மையப்­ப­டுத்தி அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­போகும் அபி­வி­ருத்தித் திட்­டத்தால் தெற்­கி­லுள்ள இளைஞர் யுவ­தி­க­ளுக்கு பாரி­ய­ளவில் வேலை­வாய்ப்­புக்கள் கிடைக்­க­வி­ருக்­கின்­றன.

அவ்­வாறு அங்கு நல்­லாட்சி அர­சி­னூ­டாக அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளு­மி­டத்து தமது செல்­வாக்கு தெற்கில் குறைந்து விடும் என்­கிற அச்­சத்­தி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனவும் அவர் தெரி­வித்தார்.

நேற்று காலை ஐ.தே.க. தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,
நாட்டின் காணிகள் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வ­தாக மஹிந்த தரப்பு குற்றம் சுமத்­து­கின்­றது. ஆனால் அர­சாங்கம் அங்கு எந்­த­வொரு காணியும் சிங்­கப்­பூ­ருக்கோ, சுவீ­ட­னுக்கோ விற்­க­வில்லை. எமது முத­லீட்­டா­ளர்­க­ளுக்கே விற்­கப்­பட்டு நாட்டின் தேசிய உற்­பத்தி மற்றும் பொரு­ளா­தா­ரத்தில் அபி­வி­ருத்­தியை இலக்­கா­க­கொண்டு செயற்­ப­டு­கின்றோம்.

இதனால் ஹம்பாந்தோட்டை மாவட்டம் மட்­டு­மல்ல மொன­ரா­கலை மற்றும் மாத்­தறை மாவட்­டமும் முழு­மை­யாக பய­ன­டை­ய­வி­ருக்­கி­றது.

முன்னாள் அர­சாங்­கத்தில் எவ்­வித இலக்­கு­மின்றி ஹம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் மற்றும் விமான நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டன. அவை தற்­போது பிர­யோ­ச­ன­மற்­ற­தா­கவே இருக்­கின்­றன. தொடர்ந்தும் அவற்றை நம்மால் கைவி­ட­மு­டி­யாது. மக்­களின் வரிப்­ப­ணத்­தினால் அமைக்­கப்­பட்ட குறித்த இரு சர்­வ­தேச தளங்­க­ளையும் பயன்­ப­டுத்த வேண்டும்.

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்­கான செல­வீ­னங்­களை கொழும்பு துறை­மு­கமே தற்­போதும் மேற்­கொள்­கி­றது. எனவே இந்த நிலையை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய தேவை எமக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதற்­கான திட்­டத்­தையே நல்­லாட்சி அரசு வகுத்­தி­ருக்­கி­றது. எமது தேசிய பொரு­ளா­தார கொள்­கைக்­க­மைய இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

எனவே அரச காணி­களை பயன்­ப­டுத்தி வர்த்­தக வல­யங்­களை ஏற்­ப­டுத்தி முத­லீட்­டா­ளர்­களை ஊக்­கு­விக்கும் திட்­டத்­தையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயா­ரித்து முன்­னெ­டுக்­கிறார்.

இந்த திட்­டத்­தி­னூ­டாக தெற்­கி­லுள்ள மக்கள் பாரி­ய­ளவில் நன்­மை­ய­டைய காத்­தி­ருக்­கின்­றனர். பாரி­ய­ளவில் வேலை­வாய்ப்­புகள் கிடைக்கப்­போ­கி­றது.

இதனால் தனது செல்­வாக்கில் சரிவு ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு அச்சம் ஏற்­பட்­டு­விட்­டது. இத­னோ­லேயே அபி­வி­ருத்தி திட்ட ஆரம்ப வைபவத்தில் இவர்கள் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தினர்.

நாம் ஹம்­பாந்­தோட்­டையில் மக்­களை அடித்து துரத்தி காணி­களை அப­க­ரிக்க வில்லை. பொது மக்­க­ளுக்கு எவ்­வித அசெ­ள­க­ரி­யமும் ஏற்­ப­டா­வண்ணமே அரச காணி­களில் திட்­டத்தை முன்­னெ­டுக்­கிறோம்.

ஆனால் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அடித்து துரத்­தப்­பட்டு காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டது.

இதன்­போது நாம் வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டங்­களை முன்னெடுத்தபோது ஜனநாயகத்தை மீறி எம்மை நசுக்கினர்.

கோத்தபாய ராஜபக்ஷ கடுமையான முறையில் இராணுவத்தை பயன்படுத்தி காணிகளை கைப்பற்றியபோது டலஸ் அளகப்பெரும, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவநாணயக்கார போன்றோர் வாயடைத்து இருந்தனர்.

இப்போது நாட்டின் அபிவிருத்திக்கான பாரியளவிலான திட்டங்களின் மீது பொறாமைகொண்டு அதனை குழப்பும் வேலைத்திட்டங்களில் இறங்கியிருக்கின்றனர் என்றார்.

LEAVE A REPLY