தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 25 பேர் உயிரிழப்பு

0
101

தாய்லாந்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளில் கடந்த முதலாம் திகதியிலிருந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள 12 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

கன மழையால் நாட்டின் இதர பகுதிகளை, தெற்கு பகுதியுடன் இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு பகுதி மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் பள்ளிகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து அங்கு வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY