எஃப்.எம். ரேடியோக்களை மூடும் நார்வே

0
116

உலகில் முதல் நாடாக எஃப்.எம். ரேடியோக்களை மூட நார்வே முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக டிஜிட்டல் ரேடியோ செவையை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

உலகில் அனைத்து நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையில், எஃப்.எம் ரேடியோ சேவைகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கி வருகின்றன.

இயற்கைச் சீற்றங்களால் இணையத் தொழில்நுட்பங்கள் முடங்கிப்போனாலும் ரேடியோ சேவை பாதிக்கப்படாது என்பதால் புயல், நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகளில் தகவல் தொடர்புக்காக பெரிதும் உதவுகின்றது.

இந்நிலையில், நார்வே நாட்டில் எஃப். எம் ரேடியோ சேவைகளை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக டிஜிட்டல் ரேடியோ சேவையை அறிமுகப்படுத்தவும் நார்வே முடிவு செய்துள்ளது. இந்த சேவையை மக்கள் பெற டிஜிட்டல் ஆடியோ பிராட்கேஸ்ட் எனும் உள்வாங்கியை வைத்திருக்க வேண்டும் என்பதால், மக்களிடையே இத்திட்டம் எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நார்வே நாட்டில் எஃப்.எம் ரேடியோ சேவை 1950-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY