புதையல் தோண்டிய 09 பேருக்கு தண்டம்

0
94

(அப்துல்சலாம் யாசீம்)

புல்மோட்டை எலந்தைக்குளம் காட்டுப்பகுதி்குள் புதையல் தோண்டச்சென்ற 09 நபர்களுக்கும் ஒருவருக்கு 90 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க இன்று (11) குச்சவௌி சுற்றுலா நீதிமன்றில் உத்தரவிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பொலிஸ் பிரிவுற்குற்பட்ட யான் ஓயாவை அண்மித்த எலந்தைக்குளம் பகுதியில் கடந்த 2016-12-12ம் திகதி புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 09 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அவிஸ்ஸாவெல,மாத்தறை. மகரகம மற்றும் கொழும்பு பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இவ்வழக்கு விசாரணை இன்றைய தினமான புதன்கிழமை குச்சவௌி சுற்றுளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டுடைய நபர்களுக்கு மூன்று குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டிருந்தாகவும் அதில் அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான காட்டுக்குள் சென்றமை.தொல் பொருள் பொருற்களை சேதமாக்கியமை, புதையல் தோண்டியமை என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY