சில விசாரணைகள் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ஒப்புதல்

0
106

எம்.ஐ.அப்துல் நஸார்

சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட சில விசாரணைகள் மந்தகதியிலேயே நடைபெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டக்களை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்றைய தினம் (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டள்ளன அல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவிததார்.

அவர் தொடர்ந்து கருத்தத் தெரிவிக்கையில், அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த விசாரணைகள் மட்டுமல்ல மேலும் சில விசாரணைகளும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததே பெரிய அளவில் குற்றச் செயல்கள் மற்றும் கொலைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகும் என அமைச்சர் தெரிவிததார்.

விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்களே அடிப்படையாக உள்ளன என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பதாக இந்த ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துகொண்ட மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் ஜீ பெரோ தெரிவித்தார்.

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவனத்தின் வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த நிறுவனத்தின் உள்ளகக் கணகாய்வின்போது வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தெரியவந்தது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் சுமார் ஒன்பது கோடி ரூபாயை விட அதிகமாதாகும். எனவும் பிரதியமைச்சர் பெரேரா தெரிவித்தார்

இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த நபரைக் கiது செய்யாது, அதன் பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சரை கைது செய்திருப்பது அதன் தலைவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதினாலா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘குறித்த வாகனம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியது அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியதன்ட பின்னரேயாகும். அவர் சிறிது காரமே தலைவாக கடமையாற்றினார். அவருக்கு சட்டவிரோதமாக செயற்பாடுகளுக்கான கட்டளைகள் இடப்பட்டதும் அவர் பதவி விலகியதாகத் தெரிவித்தார்.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்தபோது பிரதியமைச்சமாக இருந்த நபர் தற்போது இந்த அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராவார். அதனால்தான் அவர் கைது செய்யப்படவில்லையா? என மற்றுமொரு ஊடகவியலாளர்; எழுப்பிய கேள்விக்கு பதலளித்த அமைச்சர் ஏனைய அமைச்சர்களை கைது செய்யும்போது அந்தந்த அமைச்சுக்களின் பிரதியமைச்சர்களை கைது செய்யாதது ஏன் என இவ்வாறு கேட்கவில்லையே ? அவர் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாகனங்களைக் கொடுத்தார் என கண்டுபிடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY