திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

0
128

(ஹஸ்பர் ஏ ஹலீம் )

திருகோணமலையில் இன்று (11)காலை 9.30 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்தின் மன் உற்துறைமுக வீதியின் இரு மருங்களிலம் நின்று பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியத்தால் நடாத்தப்படாத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் 5 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இடம் பெற்றது.

1. வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அதிகாரப் பகிர்வே நாம் கோரும் அரசியல் தீர்வு

2. கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப் படல் வேண்டும் ,

3. பயங்கர வாத தடைச்சட்டம் நீக்கபட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

4.நடந்தேரிய சித்திரவதை படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறி முறை உருவாக்கப்பட வேண்டும்

5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கை உள்ளடக்கிய கவனயீர்ப்பு ஒரு மணி நேரம் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இவ்விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்று திருகோணமலை மாவட்ட ஆயர் கிருஸ்டியன் நோயல் இமானுவேல் அவர்களினுாடாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கையளிக்கப்பட்டது.

unnamed-2

LEAVE A REPLY