ஜோன் எப்.கென்னடி, பில் கிளிண்டன் பெற்ற TOYP உயர் விருதுக்கு சாய்ந்தமருது ஜெஸீம் தெரிவு!

0
187

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கையையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.ஜெஸீம் இங்கிலாந்தில் TOYP UK- 2016 எனும் விருதை வென்றிருப்பதுடன் JCI நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டுக்கான சர்வேதேச விருதுக்கும் தெரிவாகியுள்ளார்.

JCI எனப்படும் ஜுனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சர்வதேச நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிரூபணமாகும்.

சுமார் 124 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இவ் அமைப்பு வருடாந்தம் சர்வதேச ரீதியில் நடத்தி வரும் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, தலைமைத்துவம், சமாதானம், மருத்துவம், சிறுவர் நலன், தனி மனித மேம்பாடு போன்ற பத்து துறைகளில் சிறந்த முன்னுதாரண பிரமுகர்களை தேர்வு செய்யும் போட்டியில் ‘தன்னார்வ மேம்பாடு மற்றும் வெற்றியாளர்’ பிரிவில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் சிறந்த முன்னுதாரண பிரமுகராக இலங்கையை சேர்ந்த ஏ.எச்.எம்.ஜெஸீம் தெரிவு செய்யப்பட்டு, அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற JCI சர்வேதேச அமைப்பின் வருடாந்த நிகழ்வில் TOYP UK விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் .

அதேவேளை இவ்வுயர் விருது பெற்ற ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெற்றியாளர்களுள் ஒருவராக திகழும் ஜெஸீம் 2017 ஆம் ஆண்டுக்கான சர்வேதேச டொயிப் விருதுக்கும் தெரிவாகி உள்ளார்.

இவ்விருது வழங்கும் விழா எதிர்வரும் நவம்பர் மாதம் ஐரோப்பாவில் உள்ள அமெஸ்டடாம் நகரில் நடைபெறும் என்று JCI UK நிறுவனம் அறிவித்துள்ளது

18 வயது தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட நபர்கள் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட தகுதியானவர்களாவர். இவ்வடிப்படையில் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களில் பல்வேறு மட்டங்களில் ஒவ்வொருவரின் விண்ணப்பங்களும் பலதரப்பட்ட நடுவர்களின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு சிறந்த நபர் தெரிவு செய்யப்படுவார்.

இப்பிரிவில் இலங்கையை பூர்விகமாக கொண்டஒருவர் இங்கிலாந்தில் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை ஆகும். 1983 ஆண்டு தொடக்கம் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோன் எப்.கென்னடி, பில் கிளிண்டன் மற்றும் ஜாக்கி ஜான் போன்றோர் கடந்த காலங்களில் இவ்விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமன்றி சென்ற ஆண்டு ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொழில் முனைவு மற்றும் தொழில் முயற்சியாளர் நிறுவனத்தின் ((IOEE) அதி உயர் அந்தஸ்த்தை ((FELLOWSHIP) பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பதிவையும் ஜெஸீம் தனதாக்கிக் கொண்டார். இதற்காக இங்கிலாந்தில் உள்ள இலங்கை முஸ்லீம் கலாச்சார நிலையம் ‘கல்வி மேம்பாட்டுக்கான விருது’ வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும் .

ஐக்கிய ராஜ்ஜியத்தை தலைமையகமாக கொண்டு செயட்படும் ஜஸாஹ் குழும கம்பெனிகளின் தவிசாளராகவும் தொழில் முயட்சியாளர்களுக்கான லண்டன் கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளராகவும் செயட்படும் ஜெஸீம் இலங்கையின் கிழக்கு மாகாணம், சாய்ந்தமருதை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீத் (ராசாதம்பி), ரஹ்மத் பீவி ஆகியோரின் கனிஷ்ட புதல்வர் என்பதுடன் கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவருமாவார்.

LEAVE A REPLY