வித்தியாரம்ப நிகழ்வு: காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை

0
286

whatsapp-image-2017-01-11-at-11-54-39(நிஸார் எம்.எஸ்.எம்.)

2017 ம் கல்வியாண்டில் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இன்று (11) நாடளாவிய ரீதியாக நடைபெறுகின்றது.

இதற்கமைவாக வித்தியாரம்ப நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு காத்தான்குடி மட்/ மம/மீரா பாலிகா தேசிய பாடசாலையில் அதிபர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தலைமையில் நடைபெற்றது.

whatsapp-image-2017-01-11-at-11-54-36-1இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் இஸ்ஸதீன், மட்டக்களப்பு மத்தி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இப்றாகீம், காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பதூர்தீன், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இரண்டாம் தர மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் 2016ம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதன்மை நிலை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி எம்.ஜே.எப். றிஸ்மாவுக்கு பிரதம அதிதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

whatsapp-image-2017-01-11-at-11-54-36 whatsapp-image-2017-01-11-at-11-56-28

LEAVE A REPLY