பொலிஸ் மா அதிபர் மன்னிப்புக்கோர வேண்டும்; இன்றேல் நிலைமை தீவிரமடையும்: பந்­துல குண­வர்­தன

0
164

அம்­பாந்­தோட்­டையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தின்­போது தேரர்­களின் காவி உடையை களைந்து அவர்கள் மீது தாக்­குதல் நடத்­து­மாறு பொலிஸ் மா அதிபர் பணிப்­புரை விடுத்­துள்ளார். அவ்­வாறு பணிப்­புரை விடுப்­ப­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு இல்லை. ஆங்­கி­லே­யர்­களின் ஆட்­சி­யில்­கூட இது­போன்று தேரர்கள் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனவே பொலிஸ் மா அதி­பரும், பாது­காப்பு அமைச்­சரும், பிர­த­மரும் தேரர்­க­ளிடம் மன்­னிப்­புக்­கோர வேண்டும். இல்­லா­வி­டத்து அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதி­ராக எழும் எதிர்ப்பை ஜனா­தி­ப­தி­யாலும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத சூழ்­நிலை உரு­வாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீ வஜிர ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,அம்­பாந்­தோட்­டையில் இடம்­பெற்ற சம்­பவத்தில் அங்கு சத்­தியாக்கிரகம் நடத்­திய தேரர்கள் அமை­தி­யான முறை­யி­லேயே சத்­தி­யாக்­கி­ர­கத்தில் ஈடு­பட்­டனர்.

எனினும் மட்­டக்­கு­ளி­யி­லி­ருந்து பஸ் வண்­டி­களில் அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்­களே தேரர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். மட்­டக்­கு­ளி­யி­லி­ருந்து சென்­ற­வர்கள் தாக்­குதல் நடத்­து­வ­தற்குத் தயா­ராக கற்­க­ளையும் எடுத்துச் சென்­று­ள்ளனர்.

அமை­தி­யான முறையில் எதிப்புத் தெரி­வித்­த­வர்கள் மீது அர­சாங்கம் தாக்­குதல் மேற்­கொண்­டதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மேலும் ஜனநா­யக நாட்டின் ஆட்சி முறையில் இது பாதிப்பை ஏற்­ப­டுத்தும். ஆகவே அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து பீடங்களைச் சேர்ந்த தேரர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Virakesari-

LEAVE A REPLY