ஐக்கிய அரபு எமிரேட் தூதரை குறி வைத்து கந்தகாரில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

0
242

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கந்தகார் மாகாணாத்தில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட் வருகை புரிந்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று ஐக்கிய அரபு எமிரேட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூதர் ஜுமா முகமது அப்துல்லா அல் காபி மற்றும் தூதரக அதிகாரிகள் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக தெரிவித்தார்.

முன்னதாக காபூல் பாராளுமன்றம் அருகே தலிபான்களால் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY