உலக கோப்பை கால்பந்து 2026ல் 48 அணிகள் போட்டியிடும்: பிஃபா தகவல்

0
97

வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் கூடுதலாக 16 நாடுகள் சேர்க்கப்படும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் கியானி இன்பேன்டினோவின், 16 பேர் கொண்ட 3 குழுக்களாக அணிகளை பிரித்து அவற்றில் முன்னிலை பெறும் 2 குழுக்களை 32 சுற்றுகள் கொண்ட போட்டிகளுக்கு அடுத்து அனுப்புவது என்ற திட்டத்திற்கு பிஃபா கவுன்சில் முழு ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கான தேர்தலில், பெரிய அளவில் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என இன்பேன்டினோ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையிலும், பிஃபாவின் 211 உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு உறுதிமொழிக்கு தேவையான நிதிக்கு உதவிடும் வகையிலும் இது அமையும்.

ரஷ்யாவில் வருகிற 2018ம் ஆண்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஒளிபரப்பு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள், டிக்கெட்டுகள் விற்பனை ஆகியவற்றினால் 550 கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கும் என முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதல் நாடுகள் சேர்க்கப்பட்ட பின் 64 போட்டிகளுக்கு பதிலாக 80 போட்டிகள் நடத்தப்படும். இதனால் ரஷ்ய உலக கோப்பை கால்பந்து போட்டிகளுடன் ஒப்பிடும்பொழுது, கூடுதலாக 100 கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கும் என பிஃபா கணித்துள்ளது.

போட்டிகளுக்கான எத்தனை கூடுதல் இடங்களை பெற முடியும் என்பதனை மே மாதத்திற்குள் பிஃபா கண்டறிய வேண்டும். இந்த கால்பந்து போட்டிகளில் 16 ஐரோப்பிய அணிகள் இடம் பெற வேண்டும் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வட அமெரிக்காவில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY