உலக கிண்ண கால்பந்து: இனி 48 நாடுகள் விளையாடலாம்

0
230

ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம், உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2026 ஃபிஃபா உலக கிண்ண கால்பந்து போட்டியில் அதிக அணிகளை பங்கேற்க செய்யும் விதமாக 16 குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும்.

இக்குழுக்களில் நடக்கும் போட்டிகளில் முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் நாக்அவுட் (தகுதி அல்லது வெளியேற்றத்தை முடிவு செய்யும் சுற்று) சுற்றுக்கு தகுதி பெறும். நாக்அவுட் சுற்றில் 32 நாடுகள் விளையாடும்.

ஆனால், இந்த புதிய வடிவ உலக கிண்ண அட்டவணையின்படி ஃபிஃபா உலக கிண்ண வெற்றியாளர்கள் தற்போதுள்ள எண்ணிக்கையை விட கூடுதல் போட்டிகளில் விளையாட தேவைப்படாது.

இது குறித்த முழு தகவல்களையும் ஃபிஃபா பின்னர் வெளியிடும். ஆனால், ஃபிஃபா உலக கிண்ண அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: BBC

LEAVE A REPLY