காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் இருபது வருட பூர்த்தி

0
122

நாளை மறுதினம் (12) நடைபெறவுள்ள வருடாந்த கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபை மாநாட்டை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

Musthaffa Moulaviகாத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 20வது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு அதன் வருடாந்த பொதுச்சபை மாநாடு எதிர்வரும் 12.01.2017ம் திகதி காலை 9.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் மௌலவி கே.எம்.எம். மன்சூர் (பலாஹி) தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ‘கதீப்மார் இமாம்கள் எதிர்நோக்கும் அதற்கான வழிகாட்டல்களும்’ எனும் தலைப்பில் உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். ரிஸ்வி (அன்வாரி)  சிறப்புரையாற்றுவார்.

கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு இருபது வருடங்கள் நிறைவு பெறுகின்ற இவ்வேளையில் மூத்த உலமாக்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். சிறப்பு மலர் ‘சௌதுல் குதபா, வல் அயிம்மா’ எனும் பெயரில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு பல சிறப்பம்சங்களுடன் இருபதாண்டு பூர்த்தி விழாவில் இடம்பெறவுள்ளது.

கதீப்மார் இமாம்கள், மஸ்ஜிதில் எதிர்நோக்கும் சவால்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் கண்ணியமாக கௌரவமாக வழிநடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பு மேற்கொண்டுள்ளது.

இவர்கள் சிறு பணக் கஷ்டங்களை போக்கும் வகையில் இலகு கடன் (வட்டியல்லாத) ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

ரமழான், ஹஜ் காலங்களில் மற்றும் அனர்த்தங்களின் போது நிவாரன உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

ஸகாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இமாம்களுக்கு கல்வி, அடிப்படைத் தேவைகளுக்கு ஸகாத் நிதி வழங்கப்படுகின்றது.

மார்க்கச் சொற்பொழிவுகள், குத்பா பிரசங்கம், மக்களுக்கான ஷரீஆ வழிகாட்டல்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சமூகத்தில் இறை பணியாற்றும் கதீப்மார் இமாம்கள் கௌரவமாக, கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் முழு மூச்சாக பணியாற்றி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

சுமார் 150க்கும் மேற்பட்ட கதீப்மார் இமாம்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அவர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் கரிசனை காட்டி வருகின்றது.

மஸ்ஜிதுகள் அல்லாஹ்வை சுஜூது செய்யும் புனித தளமாகும். இங்கு இறை பணியாற்றுபவர்கள் சிறப்புக்குரியவர்கள்.

சமூகமயமாக்களில் இறை மஸ்ஜித்களில் முழு நேரம் கடiமாயற்றும் இவர்களுக்கு மாத விடுமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். வாரம் ஒரு நாள் அல்லது மாதங்களில் நான்கு நாட்கள் உட்பட விஷேட விடுமுறைகள் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு வரும் ஓர் அமைப்பாகும்.

வல்லவன் அல்லாஹ் இதன் தூய பணிகளை ஏற்றுக் கொள்வானாக.

மௌலவி எஸ்.எம்.முஹம்மத் முஸ்தபா (பலாஹி) ஆசிரியர்
செயலாளர்
கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் காத்தான்குடி

LEAVE A REPLY