(Congrats) தேசிய மட்டத்தில் கிண்ணியா மாணவன் எம்.ரொஷான் அக்தர் இரண்டாமிடம்

0
199

(அப்துல்சலாம் யாசீம்)

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 02ம் இடத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் 01ம் இடத்தினையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.ரொஷான் அக்தர் பெற்றுள்ளார்.

இவர் மக்கள் வங்கியின் உத்தியோகத்தரான எம்.எம்.மஹ்தி, கிண்ணியா அல் அக்தாப் வித்தியாலய ஆசிரியையான சித்தி பாயிஷா ஆகியோரின் மகனும் ஆவார்.

மார்க்கப்பற்றுள்ள, சமூக சேவைகளில் அக்கறையுள்ள மாணவனான இவர் வெற்றி பெற்றது, கிழக்கு மாகாணத்திற்கும் கிண்ணியாவிற்கும் புகழை ஈட்டித்தந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் ஏ.கலீலுள்ளாஹ் தெரிவித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY