வங்காளதேசம் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி

0
132

நியூசிலாந்து – வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இன்று பேஓவலில் நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன் குவித்தது. அந்த அணி வீரர் கோசின் முன்ரோ 52 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 101 ரன் எடுத்து (54 பந்து 7 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆனார்.

பின்னர் 196 ரன் இலக்குடன் விளையாடிய வங்காளதேச அணி நியூசிலாந்தின் அபார பந்து வீச்சில் திணறியது. அந்த அணி 18.1 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 8-ந்தேதி நடக்கிறது.

LEAVE A REPLY