பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்

0
169

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 77-வது ஓவரை ஓ’கீபே வீசினார். அப்போது சர்பிராஸ் அஹமது பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் அடித்த பந்து ஷார்ட் லெக் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரென்ஷாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் தொடர்ந்து பீல்டிங் செய்தார். இரண்டு ஓவர்களுக்குப் பிறகு தலைவலி இருப்பதுபோல் ரென்ஷா உணர்ந்தார். இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

முதல் இன்னிங்சில் ரென்ஷா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது மொகமது ஆமிர் வீசிய பவுன்சர் ரென்ஷாவை பலமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY