முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணம் யார்?

0
235

– ஜுனைட்.எம்.பஹ்த்-

காலத்தின் மாற்றத்தோடு முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மாற்றம் மனதை காயப்படுத்துவதுடன் ஈமான் கொண்ட எமக்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது..

இன்று எனது மனதை காயப்படுத்தி கட்டாயம் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய விடயத்தை கவலையோடும் கேள்விக்குறியோடும் பதிவு செய்கிறேன்..

இன்று நான் கண்டி நகரத்தின் ஊடாக பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அந்த நேரம் பகல் நேரம் பாடசாலைகள் கலைந்து மாணவர்கள் வீதியில் நின்று கொண்டிருந்தனர் தாங்கள் பயணிக்கும் பேருந்துக்காக காத்து நின்றனர். அதில் அதிகமாக மாணவிகள் நின்றனர் அதிலும் அதிகமான முஸ்லிம் மாணவிகள் நின்றார்கள் கவலையான விடயம் அவர்கள் தலையில் போட்டுருந்த துண்டை (ஸ்காப்) வைத்து மாத்திரமே முஸ்லிம் மாணவிகள் என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது..

மாறாக அவர்கள் அணிந்திருந்த பாடசாலை சீருடை சட்டை மாற்றுமத மாணவிகள் போன்று முழங்கால் வரையான சட்டை முஸ்லிம் சமூகத்திற்கு என்று ஒரு கலாச்சாரம் ஆடை விடயத்தில் கட்டுப்பாடு போன்றவை இங்கு கேள்விக்குறியாகவே உள்ளது..

இந்த ஆடை எமக்கு பொருத்தம் இல்லை இதனை அனிந்து கொண்ட பருவ வயது முஸ்லிம் மாணவிகள் மிகவும் அசெளகரியத்தோடு வீதியில் நிற்பதை அவர்களது முகங்களை பார்க்கும் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது..

இது யாருடைய கவனயீனம் ..? இப் பெண் மாணவிகளின் பெற்றோர்கள் ஈமான் கொண்ட இஸ்லாத்தை ஏற்று படித்துக்கொண்ட முஸ்லிம்கள் தானே ? பாடசாலை நிறுவாகம் மாற்று மதத்தவர்களாக இருக்கலாம் இஸ்லாத்தை படிக்காத தெறியாதவர்களாக இருக்கலாம்.! இங்கு குற்றம் சாட்டப்பட்டு தலை குனிய வேண்டியது பெற்றொர்களே!

இஸ்லாம் கல்வி கற்பது கடமை என்று பொதித்துள்ளதே தவிர இஸ்லாத்தையும் கலாச்சாரத்தையும் துறந்து மீறி கல்வி கற்கலாம் என்று அனுமதி தரவில்லை.!

இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் பெற்றோர்கள் மாத்திரம் அல்ல அந்த பிரதேசத்தில் உள்ள அரசியல் , மார்க்க தலைமைகள், இஸ்லாமிய அமைப்புக்கள், ஜம் இய்யதுல் உலமா சபைகள் இன்னும் பொறுப்பு வாய்ந்த தலைமைகள்..

ஏன் இவர்கள் இதுவரை காலமும் இதனை கண்டுகொள்ளவில்லை. இது இவர்களின் பொறுப்பு இல்லையா? நாளை மறுமையில் இது விடயத்தில் இவர்களிடம் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டானா?

நமது சமூகத்தில் சீர் கேடுகளும் அனாச்சாரங்களும் எமது கவனயீனத்தினால் பாடசாலையில் இருந்து சிறு பிள்ளைகளில் இருந்தே ஆரம்பிக்கிறது என்பதை நான் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இன்று சமூகத்தின் நிலை மிகவும் இழிவானதாக மாறிவருகிறது . பெயரில் மாத்திரம் முஸ்லிம் என அடையாளப்படுத்தக்கூடிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண் பெண் யுவதிகளின் நடத்தை மாற்றுமத யுவதிகளை ஒப்பிடும் போது எமது யுவதிகளின் நிலை ஆடை, ஒழுக்கம் மிகவும் கேவளமாக உள்ளது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..

இதற்கு யாரு காரணம்? இவர்களை நிர்வகிக்க கூடிய பெற்றோர்கள்.! இவர்களை வழி நடாத்தக் கூடிய உலமாக்கள்..! இவர்களை கட்டுப்படுத்தக் கூடிய சபைகள்..! இவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் பொறுப்பு கூறவேண்டும் என்று அஞ்சி கடமையை சரிவர செய்யாததே எமது சமூகத்தின் இழிவுக்கு காரணமாகும்..

எனவே. நாளை அல்லாஹ்விடம் எமது பொறுப்புக்கள் பற்றி நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்..

ஆகையால் எமது நாட்டில் உள்ள முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் ஆடை மற்றும் கலாச்சார விடயங்களில் பொறுப்பு வாய்ந்த தலைமைகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எமது எதிர்கால முஸ்லிம் தலைமைத்துவத்தை ஈமானோடும் இஸ்லாத்தோடும் வளர்தெடுக்க வேண்டும்..

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது சமூகத்தை சீரழிவுகளிலிருந்தும் கேவளத்தில்லிருந்தும் பாதுகாப்பானாக..

LEAVE A REPLY