ஷீஆக்களின் திருவிளையாட்டில் விவசாயிகள் அகப்படும் அபாயம் கல்குடா முஸ்லிம்களே உசார்

0
206

ஷீஆக்களுடைய கொள்கையானது புனித இஸ்லாத்திற்கும் அக்கொள்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது சகலரும் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

அக்கொள்கையை பின்பற்றுகின்ற அத்தனைபேரும் மறைமுகமாகவே கடைபிடித்தும் பிரச்சாரம் செய்தும் வருகின்றமை அக்கொள்கை வழிகேடு என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக இருக்கின்றது.

அவர்கள் அவர்களுடையை கொள்கையினை சமூகமயமாக்க பாமர மக்களுக்கு மத்தியில் மறைந்து ஒழிந்து சமூகப்பணிகளை செய்து வருவதுடன் படித்தவர்களுக்கு பணத்தை வாரி வளங்கி தங்கள் பக்கம் இணைத்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெளிவானது.
இதில் குறிப்பாக முக்கிய துறைகளில் இருக்கின்றவர்கள் உற்பட சமூகத்தில் உலாவருகின்றவர்களும் அடங்கும்.

எமது சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் தங்களுக்கு ஏதாவது கிடைக்குமாக இருந்தால் அதற்காக மார்க்கத்தையே விட்டுவிட துணிச்சலனாவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்வர்களை இந்த ஷீஆக்கள் அடையாலம் கண்டு காய்நகர்த்திக்கொண்டு செல்வதை அவதானிக்கலாம். அதன் தொடராக எமது பிரதேசத்தின் பிரதான தொழிலாக இருக்கின்ற விவசாய விடயத்திலும் ஷீஆக்கள் நுழைந்து “விவசாய அமைப்பு” சார்ந்த நிர்வாகத்தினை கைப்பற்ற திட்டம் தீட்டி செயற்படுகின்றனர்.

அப்படி அதில் என்ன விழைவு ஏற்படும்?

“முள்ளி வட்டவான்” என்ற விவசாய அமைப்புடைய நிர்வாக தெரிவுதான் எதிர் வரும் 05/01/2017 அன்று இடம்பெற இருக்கின்றது.

அவ்விவசாய எல்லையானது முள்ளி வட்டான் கண்டம், மஜ்மா மேற்கு, மஜ்மா கிழக்கு, தரசேனை, சோதையன் கட்டு, மீயான் குளம், சூடு பத்தின சேனை, கஞ்ஞான் வெளி, இவை அனைத்தும் அடங்கும்.

மேலே பதியப்பட்ட பகுதிகளில் விவசாய காணி மாத்திரமல்ல, மீள் குடியேற்றம், கடதாசி கூட்டுத்தாபனம் (பேபர் பெக்டரி), கால்நடை வளர்ப்பு, கல்வாடி, போன்ற முக்கிய விடயங்கள் அதற்குல் அடங்குகின்றன.

இவ்வாறன காணிகளை உள்ளடக்கப்பட்ட பகுதியின் நிர்வாகம் ஷீஆக்களுடைய கைகளுக்குச் செல்லுமாக இருந்தால்…? எமது பிரதேச விவசாயிகளின் குறைந்தளவு ஈமானும் குழி தோண்டு புதைக்கப்பட்டுவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எனவே இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05/02/2017 அன்று இடம்பெறும் விவசாய அமைப்பு சார் நிர்வாகத் தெரிவில் ஷீஆ கொள்கைகையுடைய எவனும் உள்வாங்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதனை இதன் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

(செம்மண்ணேடா சலிம்)

LEAVE A REPLY