அமைச்சர் றவூப் ஹக்கீமினால் மட்டக்களப்பு நகருக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

0
462

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

அமைச்சர் றவூப் ஹக்கீமின் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 19150 மீற்றர் வீதிகளை நவீன கார்பெற் வீதிகளாக புனரமைப்புச் செய்ய 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

ஆனைப்பந்தி வீதி, மேல்மாடி வீதி, புனித மேரி மற்றும் சிசிலியா வீதி, முதலியார் வீதி, புதிய டச் பார் வீதி, அரசாங்க விடுதி வீதி, படுகாட்டார் வீதி, திஸவீரசிங்கம் வீதி, எல்லை வீதி, மாமாங்கம் வீதி, பயனியர் வீதி, சூரியா லேன், நாகையா வீதி, அம்மன் கோர்ணர் வீதி, நேச ஒழுங்கை, 2ஆம் குறுக்கு வீதி, மத்தியூ வீதி, மைக்கல் அந்தனி வீதி, கூழாவடி வீதி, புதிய எல்லை வீதி, அம்போஸ் வீதி, முனிச் வீதி, கோல்ட் சிமித் வீதி, சந்தை வீதி, லயன்ஸ் கிளப் வீதி, ஞானசூரியம் சதுக்க வீதி, ஆகியவையே நவீன கார்பெற் பாதைகளாக மாற்றப்படவுள்ளன.

இந்த வேலைத் திட்டம் உரிய கேள்வி மனுக்கோரலின் பின்னர் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் இணைந்து நிருமாண வேலைகள் இந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY