திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

0
118

-எம்.ஐ.அப்துல் நஸார்–

ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆந் திகதி வரையான ஆறு வாரங்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால் சிரிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரகசியமாக ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டு போலி ஆவணமொன்றை வெளிட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY