தனது சுயநல அரசியலுக்காக எமது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது: ஷிப்லி பாறுக்

0
259

-எம்.ரீ. ஹைதர் அலி-

பாலமுனை அல் – ஹிதாயா பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் அண்மையில் பாலமுனை மர்ஹூம் ஆதம் லெவ்வை ஹாஜியார் வளாகத்தில் இடம்பெற்றது. அல் – ஹிதாயா பாடசாலை நிருவாகிகள், பள்ளிவாயல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டார். அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் பாலர்களின் பல்வேறு கலை, விளையாட்டு நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

ஒவ்வொரு பிள்ளைகளிடமும் சிறப்புமிக்க தனித்திறமைகள் இருக்கின்றது, அதனை அவர்கள் இன்று தமது செயற்பாடுகள் மூலம் வெளிகாட்டியிருக்கின்றார்கள். நம்மில் அனேகமானவர்கள் வீடுகளில் இருக்கின்றபோது பிள்ளைகள் செய்கின்ற சில செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அவதானிப்பதில்லை, அவைகளைப்பற்றி ஆளமாக சிந்திப்பதுமில்லை. ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பிள்ளைகள் ஈடுபட்டு செய்கின்ற செற்பாடுகளை கானும்போது அவர்களிடம் இருக்கின்ற ஆற்றல்கள் திறமைகள் என்பனவற்றை காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்று இப்பாடசாலை மாணவர்கள் நிகழ்த்திய அனைத்து நிகழ்ச்சிகளும் நகர்புறத்தில் நன்கு வளர்ச்சியடைந்த பாலர் பாடசாலை மாணவர்கள் செய்வது போன்றிருந்தது. இத்தகைய பிள்ளைகள் பாலர் பாடசாலை தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்கும்போது ஏற்படுகின்ற இடர்களை தகர்த்து அவர்களை சிறந்த கல்விமாண்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த பாலமுனை பிரதேசத்தில் இரு வைத்தியர்கள் உருவாகியுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விடயமானாலும் அது போதாது.

இன்னும் பல வைத்தியர்கள், எந்திரிகள், சிறந்த கல்விமான்கள் உருவாவேண்டும். எனவே எமது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தினை சிந்தித்து அவர்களது திறமைகளை சரிவர இனங்கண்டு அவர்களுக்கு சிறந்த ஆலோசனையுடன் வழிகாட்டல்களையும் மேற்கொண்டு மார்க்கத்தோடு இணைந்த சிறந்த கல்வியினை பெற்று கொடுப்பதன் மூலம் ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இன்று எமது சமூகத்திற்குள் பாரிய பிளவுகளையும் ஒருவருக்கொருவர் எதிரிகள் போன்று செயற்படுகின்ற நிலையினையும் காண முடிகின்றது. ஒன்றுமே அறியாத இந்த பாலர் பிள்ளளைகளின் திறமைகளை வெளிக்காட்டும் இந்த விளையாட்டு நிகழ்வுக்கு இங்குள்ள பாலமுனை மைதானத்தினை கொடுப்பதற்கு கூட மனநிலை இல்லையன்றால் எமது சமூகத்தின் ஒற்றுமையினை பற்றி நாம் எவ்வாறு பேசுவது. ஆகவே எமது சமூகம் அரசியலுக்காக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் குரோதமாக பார்க்கின்ற செயற்பாடு மாறவேண்டும்.

எங்களுக்கு பலதரப்பட்ட பிரச்சனைகள், சவால்கள், எதிர்ப்புக்கள் மற்றும் முடக்கங்கள் ஏற்படுகின்ற பொழுது அதனை நாம் மிகவும் பொறுமையாக நின்று சிந்தித்து கையாளுகின்றோம். அவ்வாறு அவர்கள் அபான்டங்களை எம்மீது சுமத்துகின்ற போது அதற்கு பதிலளித்து எமது சமூகம் பிளவுபட்ட சமூகமாக உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காக பொறுமையுடன் இருக்கின்றோம். எமக்கு ஏற்படுகின்ற அனைத்து சோதனைகளையும் எமது சமூகத்திற்காக பொறுமையுடன் நின்று சாதிப்பதனை விரும்புகின்றோம்.

மேலும் இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பல்வோறு செயல்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் 2016ம் ஆண்டு மாகாண சபையின் நிதியொதிக்கீட்டிலிருந்து 50,000.00 ரூபாவினை இப்பாடசாலைக்கென ஒதிக்கியிருக்கின்றோம். இப்பாடசாலையினை இப்பிரதேசத்தில் சிறந்த பாலர் பாடசாலையாக உருவாக்குவதற்கு மேற்கொள்ளவேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் சிறந்த முறையில் மேற்கொண்டுவருகிறோம்.

பாலமுனையின் பிராதான வீதியினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தபோது ஐ ரோட் திட்டத்தினூடாக அதனை செப்பனிட்டு தருவதற்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதே போன்று கடற்கரை வீதியினையும் காபெட் வீதியாக செப்பனிட்டு தருவதற்கும் வாக்குறுதி அளித்துள்ளார். இறுதியாக நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது பாலமுனை கிராமத்திற்கு இறங்குதுறை ஒன்றினை அமைத்து தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன். இன்ஷாஅல்லாஹ் 2017ம் ஆண்டு அதனை அமைத்து அதன் மூலம் புதிய தொழிநுட்பங்களை மீண்பிடி செயற்பாட்டில் மேற்கொள்வதற்கு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

எனவே எதிர்காலத்தில் அரசியலுக்கு அப்பால் நின்று எமது சமூகத்தின் தேவைகள் எவை என்பதனை அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிந்தித்து வருகின்றோம். அரசியலினை ஒதுக்கி வைத்துவிட்டு எமது முஸ்லிம் சமூகம் பிளவுபட்டுவிடாமல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். ஆட்சி அதிகாரத்தினை இறைவன் அவன் நாடியவர்களுக்கு வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் நாம் என்றும் ஒற்றுமைபட்ட சமூகமாக வாழவேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY