சுயாதீன ஆணைக்குழுக்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பர் – சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதி

0
137

-எம்.ஐ.அப்துல் நஸார்-

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் விதத்தில் அழுத்தங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்பதை தெளிவாகக் கூற முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக சிங்கள நாளேடோன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையினால் தாபிக்கப்பட்டு, செயற்படுத்தப்படும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் விதத்தில் அழுத்தங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்பதை தெளிவாகக் கூற முடியும் அதேபோன்று ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு சயாதீன ஆணைக்குழுக்களினதும் செயற்பாடுகள் மற்றும் சுயாதீனத் தன்மை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரிடையே முரண்பட்ட கருத்துக்கள் இல்லை எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு அமைவாக ஏற்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆணைக்குழுக்களுக்கூடாக மேற்கொள்ளப்படுகின்ற தேசிய கடமைகளை நம்பகத் தன்மையுடன் மேற்கொள்ளுமாறு அனைத்துத் தலைவர்களிமும் உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY