விரைவில் மைத்ரி மஹிந்த கூட்டணி அமையுமா: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் நகர்வுகள்

0
206

நல்லாட்சி அரசு அமையுமட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் வாய்ந்த தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜானாதிபதி மைத்ரி சுதந்திரக் கட்சியின் தலைமையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலில் கையகப் படுத்திக் கொண்டார்.

அதற்கு நல்லாட்சி அரசு பாரிய விலையைக் கொடுக்க நேரிட்டது 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்கிக் கொளவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விசேடமாக மஹிந்த அணியில் இருந்த பிரதான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பிரதியமைச்சு பதவிகளை மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்றாலும், 2015 பொதுத் தேர்தல் இடம் பெற்ற பொழுது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் சுதந்திரக் கட்சியினரது அழுத்தத்தின் பெயரில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை குருனாகலையில் போட்டியிட அனுமதிக்க வேண்டிய கற்றைய நிலை ஏற்படுமளவிற்கு மஹிந்த அணியினரது அரசியல் நகர்வுகள் வலுப்பெற்றிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, முன்னால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பலமான குற்றச் சாட்டுக்கள் இருந்த பொழுதும் மக்கள் எதிர்பார்த்த வீச்சில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடம் பெறாமைக்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருந்ததனை உணர முடிந்தது.

இலங்கையில் மூன்றாவது பாரும் அரசியல் அணியாக இன்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான கூட்டு எதிரணி பரிணாமம் அடைந்துள்ளது, சுதந்திரக் கட்சியை ஒன்றிணைய விடாது கூறுபோடுகின்ற அரசியல் நகர்வுகளை பிரதமர் ரணில் விகிரமசின்ஹா மேற்கொள்வதாகவும் அதற்கேற்றவகையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை பாதுகாப்பதாகவும் அவர்களை வளர்த்துவிட்டதாகவும் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை பலப்படுத்துகின்ற நகர்வுகள் குறித்து கூடுதல் கரிசனை செழுத்துவதனையும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் அரசியல் செல்வாக்கையும் மக்கள் ஆதரவுத் தளத்தையும் சாதகமாக பரிசீலிக்கின்ற சமிக்ஞைகளை வெளியிட்டு வருவதாகவே தெரிகின்றது.

நல்லாட்சி அரசின் நிகழ்ச்சி நிரல் எப்படிப் போனாலும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் எதிர்கால தேர்தல்களை கருத்திற்கொண்டு தத்தமது அணிகளை பலப்படுத்திக் கொள்கின்ற கைங்கரியங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள் மற்றும் பொது எதிரணியினரின் அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை தனிமைப் படுத்தி விடுவதனை அவர் ஒரு பொழுதும் கண்டும் காணாது இருக்கப் போவதில்லை.

அரசியல் கள நிலவரங்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் மஹிந்த அணியினர்

மேற்படி அரசியல் கள நிலவரங்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் மஹிந்த அணியினர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரையும் உச்ச கட்ட இராஜ தந்திரத்துடன் கையாண்டு வருவதோடு நல்லாட்சி அரசு குறித்த நம்பிக்கஈனங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டு வருகின்றனர்.

உதாரணமாக பாரிய கடன் சுமையினால் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நல்லாட்சி அரசு பாரிய அபிவிருத்தி திட்டங்கள எதனையும் முன்னெடுக்காது இருப்பதனை தமக்குச் சாதகமாக பிரச்சாரம் செய்யும் மஹிந்த தரப்பினர் தாம் பெருந்தெருக்களை துறைமுகங்களை அமைத்ததாகவும், திவிநேகும, மகநெகும திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டதாகவும் நல்லாட்சி அரசு எதனையும் செய்யவில்லை என்றும் பொது சன அபிப்பிராயத்தை தோற்றுவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY