தரவரிசையில் அசார் அலி முன்னேற்றம்

0
196

துபாயில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 302 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் அசார் அலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் கிடுகிடுவென முன்னேற்றம் கண்டுள்ளார்.

முச்சதம் விளாசிய 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்ற அசார் அலி 5 இடங்கள் ஏற்றம் பெற்று 12-வது இடத்தை பிடித்துள்ளார். செஞ்சுரி போட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் பிராவோ 28-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இதே போட்டியில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை அள்ளிய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ, பந்து வீச்சாளர் தரவரிசையில் 11 இடங்கள் உயர்ந்து 30-வது இடத்தை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY