ஜனாதிபதியின் கருத்துகள் நல்லாட்சி சிந்தனைக்கு எதிரானவை

0
78

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் கூட்டமொன்றில் கூறிய கருத்துகள் குறித்து NFGG கடும் அதிருப்தி தெரிவிக்கிறது.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், சிலரது இரகசிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளிலும், அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டோரைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியின் கருத்துகள் துணைபோய் விடக் கூடாது என்ற அச்சம் காரணமாகவே NFGG இந்த அதிருப்தியை வெளியிடுகிறது.

அத்துடன், ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களும் அணுகுமுறையும், நல்லாட்சி சிந்தனைக்கும் நடைமுறைகளுக்கும் மாற்றமானவை என அது மேலும் தெரிவித்துள்ளது.

முன்னர் மதிப்புக்குரிய சோபித தேரர் தலைமையில் இயங்கிய சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் (NMSJ) பிரஜைகள் முன்னணியும் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களைக் கண்டித்துள்ளன.

அவற்றின் நிலைப்பாட்டுடன் NFGG யும் உடன்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற NMSJ கூட்டத்தில், அரசாங்கத்தின் இதுபோன்ற தவறான அணுகுமுறைகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோது, அதற்கு NFGGயும் உடன்பட்டிருந்தது.

பேரளவிலான நல்லாட்சி அல்ல, உண்மையும் நேர்மையும் நிலவும் அர்த்தபூர்வமான நல்லாட்சியே (Meaningful Good Governance) நாட்டுக்கு உடனடித் தேவையாக உள்ளது என NFGG மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY