மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் கோர விபத்து நால்வர் படுகாயம்.

0
227

(-ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கூமாச்சோலைச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (ஒக்ரோபெர் 18, 2016) பகல் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதியினூடாக பாலாமடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் பாலாமடுவில் இருந்து செங்கலடி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காமடைந்த நால்வரும் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

page

LEAVE A REPLY