ஜாவா, டொமினிக்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்

0
153

கரிபியன் கடற்பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களை கொண்ட நாடான டொமினிக்காவில் சுமார் 75 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நாட்டின் தலைநகரான ரோஸியாவில் இருந்து மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் கடலின் அடிப்பகுதியில் சுமார் 148 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுக்கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதேபோல், இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான ஜாவா கடற்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலின் அடிப்பகுதியில் சுமார் 600 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை சுமார் 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.

இவ்விரு நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவுமில்லை.

LEAVE A REPLY