இப்படியும் சபிக்கலாம்

0
196

(Mohamed Nizous)

நுரைச்சோலை பிளாண்ட் போல
கரைச்சலில் விழுந்து போக..

கிளப்பில் சண்டை பிடித்து
கெமராவில் மாட்டிப் போக..

விசாரணை அச்சம் வந்து
உசாரின்றி ஊர்வலம் போக..

கண்டவள் பின்னால் அலைந்து
தண்டவாளத்தில் தலைவைத்து சாக….

Game request வந்து வந்து
சாமத்திலும் தூக்கம் இழக்க..

ஒற்றைக் கோட்டில் ஓவர் டேக் பண்னி
கற்றையாக நோட்டை இழக்க

OPD கங்காணி உன்னை
கூப்பிடாமல் ஆப்பு வைக்க…

படித்த பாடத்தில் வராமல்
அடுத்ததில் கேள்விகள் எடுக்க..

இண்டசிட்டி பஸ்ஸில் ஏறி
எல்லா ஹோல்டிலும் நின்று போக…

சீனாவின் பொருளை வாங்கி
தானாக கஷ்டத்தில் மாட்ட…

அவசரக் கோல் பேசும் போது
அடியோடு battery இறங்க..

அரசாங்க உத்தியோகம் பார்த்து
அடிக்கடி கஜானா காய..

போயாவின் லீவு நாட்கள்
ஞாயிறில் வந்து தொலைக்க…

இப்படித் திட்டிப் பார்த்தால்
அப்படியே பலிக்கக் கூடும்.

LEAVE A REPLY