(Video) வைத்தியசாலையில் தீ விபத்து; 23 பேர் பலி: இந்தியாவில் சம்பவம்

0
282

orrisa-fireஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மருத்துவ அறிவியல் மைய மருத்துமனையில் (இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 23 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவு (ஐ.சி.யு) அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து பக்கத்து அறைகளுக்கு பரவியது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணி

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து வந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி இரங்கல்

ஒடிசா தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது,

தீ விபத்தில் பலர் பலியாகியிருப்பது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்காக, அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசியிருக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கிட அமைச்சர் டி.பி.ராதனிடமும் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு துணை நிற்கும்

தீவிபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசியுள்ளாக டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

Source: Dinamalar

bhubaneswar-fire-new-photo-759

LEAVE A REPLY