ஆரையம்பதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு

0
225

dscn1091(விஷேட நிருபர்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் பழுதடைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று (17) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி நரசிமராவ் ஆலயவீதியிலுள்ள வீடொன்றிற்கு கொங்கிறீட் இடுவதற்காக குழி தோண்டிய போது இந்த மோட்டார் குண்டு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டுரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். இங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் அந்த குண்டை மீட்டுள்ளனர்.

இது 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு எனவும் இந்த குண்டு பழுதைடைந்த நிலையில் காணப்படுவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

இங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் விசாரணைகளில் ஈடுபட்டனர் மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

dscn1094

LEAVE A REPLY