வரதட்சணை தராததால் கொடூரம்! தனது தந்தை மற்றும் உறவினர்களை விட்டு தனது மனைவியை பலாத்காரம் செய்த கணவன்! இந்தியாவில் சம்பவம்

0
563

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 30 வயதான ஒரு பெண்ணை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

அந்த பெண்ணிடம் ரூ.51 ஆயிரம் மற்றும் இருச்சக்கர வாகனம் வேண்டும் என கூறி அவரின் தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் அவரது கணவர்.

ஆனால் ஏழ்மை காரணமாக அவர்களால் அந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட ஒரு கும்பலே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் என் தந்தை ஒரு திருடன் என அந்த பெண்ணின் கையில் பச்சை குத்தியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுத்து அவர்களை கைது செய்யவில்லை.

Source: Kaalaimalar

LEAVE A REPLY