சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

0
205

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அரசாங்க வனத் திணைக்களப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வாகமொன்றில் ஏற்றிவரப்பட்ட ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை- உப்போடை வயற்பிரதேசத்தினூடாக இம்மரக்குற்றிகளை ஏற்றிய வாகனம் பயணித்தவேளை பொதுமக்களிடமிருந்த கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் இவற்றைக் கைப்பற்றினர்.

மரக்குற்றிகளுடன் வாகனம் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. அவ்வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களில் மேலும் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY