குளவி கொட்டுக்கு இலக்காகி தாய், தந்தை, மகள் வைத்தியசாலையில்

0
207

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மீகஸ்வெவ பகுதியில் வீட்டுக்குப்பின் புறமாக உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற தாய், தந்தை, மகள் ஆகிய மூவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று (17) காலை 10.30 மணியளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் அதே இடத்தைச்சேர்ந்த ரணசிங்ககே லஹிறு (36வயது) கே.ரம்யலதா (33வயது) மற்றும் அவரது மகளான ஆர்.மகேசிகா (11வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மீகஸ்வெவ பகுதியில் வீட்டுக்கு பின் புறமாக உள்ள காட்டுப்பகுதியிக்குள் விறகு எடுக்கச்சென்ற போது மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்ததில் இவ்வணர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY