சிற்பிகள் அகழ்வினால் மீனவர்கள் உட்பட கரையோரமும் பாதிப்பு

0
147

img-20161017-wa0005(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்கா முனைப்பகுதியின் களப்புப் பகுதியில் கடலில் உள்ள சிற்பிகளின் அகழ்வினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்

குறிப்பாக இச் சிற்பி அகழ்வின் போது கடல் மண் மட்டி போன்றனவும் கடல் வாழ் உயிரினங்கள் நண்டுகள் மீன்களின் உற்பத்தி இனப் பெருக்கம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் அதனுடன் சேர்ந்து மண்களும் சேர்ந்து அகழ்ந்தெடுக்கப்படுவதால் கரையோர மண் அரிப்பு ஏற்படுவதாகவும் இதனால் சூழல் தாக்கம் உட்பட இரண்டு அடி ஆழமாக உள்ள பகுதி தற்போது சிற்பிகளின் அகழ்வினால் எட்டு அடி ஆழமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதிப்பு கடந்த முப்பது வருடகாலமாக அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையும் இதனால் சுமார் கிண்ணியா கரையோர3000 சிறு கடல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இதனை தடுக்க உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்களின் கோரிக்கையாகும் இல்லாது போனால் வீதிப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

img-20161017-wa0007

LEAVE A REPLY