காத்த நகரை வழிநடாத்திய இரு மாமனிதர்களை கௌரவப்படுத்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை

0
334

ahamed-lebbe-abdullah-rahmani(எம்.ரீ. ஹைதர் அலி)

காத்தான்குடியில் மாத்திரமல்லாமல் முழு கிழக்கு மாகாணத்திலும், எமது நாடு பூராகவும் பேசப்பட்ட பேசப்பட்டுக்கொண்டிருக்கும் மிகவும் உன்னதமான மனிதர்கள் எமது காத்தான்குடி பிரதேசத்தையும், எம்மையும் விட்டு பிரிந்திருக்கின்றார்கள்.

கடந்த யுத்த காலத்தின்போது அமைச்சரவை அந்தஸ்த்துடைய ஒரு அமைச்சரைப்போன்று செயற்பட்ட அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்களும், அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக ஆத்மீக ரீதியான வழிகாட்டுதலோடு, அல்லாஹ்வை பயந்தவராக இந்தியாவின் அதிராம் பட்டினத்திலே பிறந்து தனது வாழ்வில் 57 வருடங்கள் காத்தான்குடியிலே கழித்து தான் வாழ்ந்த காத்தான்குடி பிரதேசத்திலே மரணித்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) இரண்டு பேரும் மிகவும் அன்னியொன்னியமாக காத்தான்குடி பிரதேசத்தின் விடயங்களில் மாத்திரமல்லாமல் முழு கிழக்கு மாகாணத்திலும், எமது நாடு பூராகவும் இருக்கின்ற முஸ்லிம் மக்கள் சார்ந்த விடயங்களில் மற்றைய இன சகோதரர்களுடன் ஒற்றுமையுடனும், இன ஐக்கியத்துடனும் வாழக்கூடிய வகையில் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இவர்கள்.

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு மரணித்த அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் மரணித்த ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களும் இந்த காத்தான்குடி மண்ணுக்கு செய்த சேவைகளையும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவைகளையும் நினைவு கூறும் முகமாகவும், காத்தான்குடி தள வைத்தியசாலையை உருவாக்குவதற்கு பாரிய அர்ப்பணிப்புடன் அத்தனை விடயங்களையும் முயற்சி செய்து இவ்வைத்தியசாலையை நிறுவியது மாத்திரமல்லாமல் இன்றுவரை நல்ல முறையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு காரணமாக இருந்த அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்களுடைய ஞாபகர்த்தமாக காத்தான்குடி தள வைத்தியசாலையினுடைய பெயரை அஹமட் லெப்பை ஞாபகர்த்த வைத்தியசாலை (Ahamed Lebbe Memorial Hospital) என்று மாற்றுவதற்கும், அதேபோன்று மார்க்க ரீதியான கல்விக்கு உயிர் கொடுத்து வளர்த்த ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களுடைய பெயரில் ஷெய்ஹுல் பலாஹ் வித்தியாலயம் (Shehul Falah Vidyalaya) என புதிதாக ஒரு பாடசாலையினையும் உருவாக்குவதற்கான ஒரு முயற்சியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்டுள்ளார்.

எனவே, அதற்கான சட்ட ரீதியான விடயங்கள் மற்றும் அரசியல் ரீதியாக நகர்த்தப்பட வேண்டிய விடயங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் வைத்தியசாலையின் பெயரை அஹமட் லெப்பை ஞாபகர்த்த வைத்தியசாலை (Ahamed Lebbe Memorial Hospital) என மாற்றுகின்ற விடயத்திலும், புதிதாக ஒரு பாடசாலை ஒன்றினை உருவாக்கி அதற்கு ஷெய்ஹுல் பலாஹ் வித்தியாலயம் (Shehul Falah Vidyalaya) எனவும் பெயர் சூட்டி எமது காத்தான்குடி பிரதேசத்தில் கண்ணியப்படுத்தியவர்களாக இவர்களின் ஞாபகர்த்தமாக இதனை மேற்கொள்ள முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

LEAVE A REPLY