“ஊடகங்களே உலைவைக்காதீர்” ஒரு ஏழைக்குடும்பத்தின் கண்ணீர் கலந்த வேண்டுகோள்..!

0
690

14628032_10207785882670681_670759835_n(எம்.எஸ்.எம் சுஜா, முஹம்மட் நஹியான்)

மட்டக்களப்பு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பத்தின் சிரேஷ்ட புதல்வனே பேரரானந்தம் செந்தூரன் (22). தனது குடும்பத்தின் வறிய நிலையை மாற்றி முன்னேற்றும் நோக்கில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டிற்கு பயணமானார்.

இருப்பினும் செந்தூரன் கட்டார் சென்று ஐந்தாறு மாதங்களான பின்பும் எந்த வித தொடர்பும் இல்லாது தான் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட குடும்பத்தினருக்கு தெரியாத நிலையில் இருந்தார்.

தனது மகனின் நிலைகுறித்து அறிந்து கொள்வதில் குடும்பத்தினர் மிகவும் பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அவை கைகூடாமல் போகவே செந்தூரனின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் உதவியை நாடினர்.

தகவலறிந்த ஆணையகம் கட்டாருக்கான இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பினை மேற்கொண்டு செந்தூரன் தொடர்பான தகவலளித்து அவரைத் தேடும் பணியினை மும்முரப்படுத்தினர்.

இதன் பலனாக ஒரு மாத கால குறுகிய எல்லைக்குள் செந்தூரன் நலமாக இருக்கின்ற தகவலும் அவர் வேலை செய்ய சென்ற நிறுவனத்தில் சம்பளயின்மை மற்றும் எவ்வித உதவியின்மை போன்ற விடயங்களால் மிக கஷ்ட சூழலில் அவர் இருப்பதை அவரது குடும்பத்தின் கவணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து தற்போது செந்தூரன் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதோடு சிறந்த நிறுவனமொன்றிலும் தனக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க இருப்பதாகவும் அவர் கட்டார் சென்று வேலை இல்லாமல் இருந்த காலத்திற்கான சம்பளம் அனைத்தும் கட்டாருக்கான இலங்கை தூதரக்கத்தின் முயற்சியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆயினும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் “தனது மகன் செந்தூரனைக் காணவில்லை” என்று வெளியிடப்பட்ட செய்தியினை சில ஊடகங்களும், சமூகவலைத் தளங்களும் தனது மகன் கிடைத்து பல மாதங்கள் கடந்த பின்னரும் அச்செய்தியை வெளியிடுவதாக செந்தூரனின் தாயார் வேதனையுடன் குறிப்பிட்டார்.

14697283_10207785882710682_349812914_oஅவர் மேலும் இது தொடர்பாக கூறுகையில், சிலர் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் இலங்கை தூதரகம் ஆகியவற்றை கடுமையாக சாடுவதாகவும் இதனால் தமது மகனின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டு கட்டாரிலிருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது மகன் கட்டாரிலிருந்து மாதாந்தம் அனுப்பி வைக்கும் பணத்தினாலேயே தமது குடும்பம் ஓரளவு இயங்குவதாகவும் இவ்வாறான நிலையில் ஊடகங்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் மேற்கொள்ளும் பொறுப்பற்ற செயலால் தனது குடும்ப நிலை பாதிப்புக்குள்ளாகி தாம் மீண்டும் வறிய நிலைக்கு சென்று விடுவோமோ என்று அச்சமடைவதாகவும் கண்ணீர்மல்க கூறினார்.

அத்தோடு தனது மகனை மீட்டுத்தர பல ஊடகங்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதோடு தனது மகன் கிடைத்துவிட்டதால் மீண்டும் குறித்த செய்திகளை வெளியிட்டு இலங்கை மனித உரிமை ஆணையகம் மற்றும் கட்டாருக்கான இலங்கை தூதரக்கத்தின் பொறுப்பு மிக்க பணியை தவறாக கருதியும் எமது குடும்பத்தின் வயிற்று பிழைப்பிக்கும் உலைவைக்க வேண்டாம் எனவும் செந்தூரனின் தாயார் மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொண்டார்.

அத்தோடு தனது மகனை பொறுப்புடன் மீட்டுத்தந்த இலங்கை மனித உரிமைகள் ஆணையகம், கட்டாருக்கான இலங்கை தூதரகம் ஆகியவற்றிற்கும் தமது குடும்பம் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்..!

LEAVE A REPLY