அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை

0
199

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம் புரிந்துள்ளார்.

இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டக்கியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

லெஸிங்டன் போலீசார் இது குறித்து கூறுகையில், “ரெஸ்டாரண்ட் ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடி கே-வின் கழுத்தில் குண்டடிப்பட்டது” என்று தெரிவித்தனர்.

பின்னர் குண்டடிபட்ட நிலையில் டிரினிடி கே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

தனது மகள் உயிரிழந்ததை டைசன் கே தொலைக்காட்சி மூலம் உறுதி செய்தார்.

LEAVE A REPLY