பாலியில் இரண்டு தீவுகளை இணைக்கும் பாலம் இடிந்து 9 பேர் பலி

0
121

இந்தோனேசியாவில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் பாலித் தீவும் ஒன்று. இந்த தீவில் உள்ள சிறிய தீவுகளான நுசா லெம்போங்கன் மற்றும் நுசா செனிங்கன் தீவை இணைப்பதற்காக மஞ்சள் நிற பாலம் ஜெம்பாடன் கனிங் உள்ளது.

இந்த இரண்டு தீவுகளில் உள்ள மக்கள் நடைபயணமாகவும், மோட்டார் சைக்களில் மூலமாகவும் கடந்து செல்வது வழக்கம். உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன் ஜெம்பாடன் கனிங் என்ற இந்த பாலம் 2013-ம் ஆண்டு உடைந்து விழுந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை.

LEAVE A REPLY