மோசமான வாய் துர்நாற்றம் எதன் அறிகுறியாக இருக்கலாம்?

0
861

உடல் உறுப்புகளில் மிக முக்கியமனது கல்லீரல். இது ஓயாமல் வேலை செய்து கொண்டேயிருக்கும்.

ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மட்டும் அவை செய்யவில்லை. ரத்தத்தை சுத்தம் செய்வது, சத்துக்களை உடல் முழுவதும் அனுப்புவது, நச்சுக்களையும் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது.

உடல் முழுவதும் அன்றாடம் உற்பத்தியாகும் அமோனியா போன்ற செல்களை பாதிக்கும் நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அனுப்பி வெளியேற்றுவது என பல வேலைகளை செய்கிறது.

இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் பலவித அறிகுறிகளை காண்பிக்கும்.

ஓயாமல் அதற்கு வேலை தரும்படியான கொழுப்பு மசலா உணவுகளை சாப்பிடுவது, நச்சுக்கள் அதிகம் இருக்கும் கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,மது குடிப்பது, என பலவித காரணங்கள் உள்ளன.

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

அந்த அமோனியாவை கல்லீரலால் சிறு நீரகத்திற்கு அனுப்ப முடியாமல் போகும்போது அது உடலிலேயே தங்கிவிடும். இதனால் வாய் துர் நாற்றம் மிக அதிகமாக இருக்கும்.

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால் சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

கல்லீரல் செயல்படாத போது கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உட்படாது இதனால் ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்ந்திருக்கும். .

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத்தில் திட்டுதிட்டாக வெள்ளையாக காணப்படும்

கல்லீரல் பாதிக்கபடும்போது உணவை ஜீரனிக்க பயன்படும் அடர் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த திரவமான பைல் சுரப்பதில் பிரச்சனை உண்டாகி, அவை சிறு நீரகத்தில் அடர் நிறத்தை தந்துவிடும்.

கருமையாக அல்லது மிக அடர் பழுப்பு நிறத்தில் கழிவுகள் ஏற்படும்.

LEAVE A REPLY