மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

0
97

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர், கல்குடாத் தொகுதி மற்றும் ஏறாவூர் நகர் பகுதிகளில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் சந்தித்து கலந்துரையாடினார்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த ஏராளமான முன்பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதன் போது முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார்

இதன் போது அவற்றில் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கிய முதலமைச்சர் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வினை விரைவில் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட திட்டங்களை அமுல்ப்படுத்துவதாகவும் எதிர்வரும் மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தில் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கென அதிக நிதியை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் கூறினார்.

இதன் போது தம்மை நேரில சந்தித்து தமது பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்டமைக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறினர்.

LEAVE A REPLY