SLMC கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்ட போட்ட சதித்திட்டம் அம்பலமானது…!!!

0
343

(சுலைமான்)

கடந்த கால மஹிந்த ராஜ பக்ச அரசாங்கத்தில் பாரிய அளவிளான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் உள்வாங்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

அந்த நிலைப்பாடு தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக நாடளாவிய ரீதியில் பாரிய அளவிளான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் வருகின்றன.

அதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சுக் குற்பட்ட நகர திட்டமிடல்,நீர்வழங்கள் அமைச்சின் ஊடாக பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நாடளாவிய ரீதியில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்குடா பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்த சுத்தமான குடி நீர் பிரச்சினை, மற்றும் சோர்வடைந்து கிடந்த அபிவிருத்தி திட்டங்கள் போன்ற இன்னொறன்ன பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டு வருகிறார்.

அதற்கமயவே கடந்த நூறூ நாள் திட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக குடிநீர் திட்டத்தின் முதலாம் கட்ட நீர் வழங்கள் ஓட்டமாவடி,மாவடிச்சேனை பிரதான வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெகு விரைவில் வாழைச்சேனை பிரதேச மக்களும் சுத்தமான குடிநீர் பெறும் வண்ணம் ஏற்பாடுகளை செய்து தருமாறு கணக்கறிஞர் றியாழ் அவர்கள் கடிதம் மூலம் தலைவருக்கு கோரியுள்ளார்கள் அதற்கு அமைய அந்த பகுதிகளுக்கும் சுத்தமான குடி நீரை துரிதமாக வழங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அது மாத்திர மன்றி கல்குடா பிரதேசம் முழுவதுமான குடி நீர் பிரச்சினையை பூர்த்தி செய்வ தென்றால் அன்னளவாக 2000 கோடி ரூபாய் அளவு தேவைப் படுவதால் அதனை எமது அரசாங்கத்தினால் பெற்று கொள்வதற்கு முடியாத நிலையில் அதனை பெற்றுக் கொள்ள தற்போதுள்ள சூழ் நிலையில் நீண்ட கால அவகாசமும் தேவைப்படுகிறது ஆகவே அந் நிதியை பெற்றுக் கொள்வதற்காக பல வெளிநாட்டு உயர் அதிகாரிகளை சந்தித்து பல கட்ட பேச்சு வார்த்தைகளை எம் மண்ணின் மைந்தன் கணக்கறிஞர் றியாழ் அவர்கள் துரிதமாக மேற் கொண்டு வருகிறார்.

இந்த முயற்சியில் தலைவரின் அமைச்சுக்கு அடிக்கடி றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் எம்.எம்.எம்.சமீம் ஆசிரியர் ( அமைச்சரின் அமைச்சின் இணைப்பதிகாரி சமூக நீர்வழங்கள் திணைக்களம்)
அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்பட்டது மாத்திரமின்றி றியாழ் அவர்களுடன் இணைந்து பல அபிவிருத்தி திட்ட ஏற்பாடுகளை கொழும்பில் இருந்து மேற்கொண்டுள்ளார் இன்னும் மேற் கொண்டும் வருகிறார்.

இவ்வாறான இவர்களின் அயராத முயற்சியினால்தான் கல்குடாவின் அபிவிருத்திக்கான நிதி ஒதிக்கீட்டுக்கான அனுமதியை தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள் இந்த திட்டவரைபுகளை மேற்கொள்வதில் ஊரில் உள்ள சில முக்கிய நபர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் என்பதை நாம் மறுக்க வில்லை.

அதிலும் குறிப்பாக தற்போதைக்கு கல்குடா பிரதேசம், மற்றும் அதனை அன்டிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி பணிகளுக்காக கணக்கறிஞர் றியாழின் வேண்டு கோளின் பெயரில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சுமார் 150மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தற்போது இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான திட்ட வரைபுகளை மாகாண திணைக்களம் சிலவற்றில் பெறுவதற்கு பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதணை சிலர் தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும் தாங்கள் ஆதரிக்கும் வெளியூர் அரசியல்வாதியை மேற் கோள் காண்பித்து அவரின் மூலமே இவ் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதானது கட்சிக்குள் விரிசலை உண்டாக்குவதற்கான புதிய சதித்திட்டம் ஆகும்.

ஒரு காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரினால் ஒற்றுமைப்பட்டு ஒரே கூரையின் கீழ் இருந்த கல்குடா பிரதேச மக்கள் இன்று கணக்கறிஞர் றியாழினால் ஒன்று சேர்ந்து இருப்பதை பார்க்கும் போது எமக்கு மிகுந்த சந்தோசம் அளிக்கிறது இதனை தாங்கி கொள்ள முடியாத [போராளிகள் என்ற போர்வையில்] உள்ள ஒரு சில அடிவருடிகள் அதனை தனது அரசியல் வியாபாரத்துக்காகவும்,கொந்தராத்துக்காகவும் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற் கொண்டு வருவதை இத்துடன் நிருத்திக் கொள்ள வேண்டும்.

இதன் உண்மை தன்மையை மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் இவ்வாறானவர்களின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு அடையாளம் காட்டவும் இவ் அபிவிருத்தி திட்டங்களை யார் கல்குடாவுக்கு கொண்டு வந்தார் என்பது தொடர்பாக தெளிவாக இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

இது பொய் என்றால் ஆதாரங்களை கொண்டு நிருபியுங்கள் அவ்வாறு இல்லாமல் வதந்திகளை பரப்பி மக்களை ஏமாத்த முற்படாதீர்கள் உங்களை போன்றவர்களின் கதைகளை கேட்டு ஏமாற கல்குடா மக்கள் இனி என்றென்றும் தயாரில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்ரை உபத்திரம் செய்யாதீர்கள் என தயவாய் கேட்டுக் கொள்வதோடு கல்குடா மக்களுக்கு நன்மை செய்யவந்த எம் தலைவன் றியாழை மெளனியாக்கி கல்குடாவின் சேவைகளை இடை நிறுத்தி உங்கள் சுய லாபத்துக்காக மீண்டும் மீண்டும் கல்குடாவை அரசியல் அநாதையாக்க முற்படாதீர்கள்.

கணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்டி வெளியூர் அரசியல் வாதியை திருப்திபடுத்துவதற்கான சதித்திட்டமே இதுவாகும் என்பதையும் மக்கள் வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY