எமது மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த காணிகளை விடுவிக்கக் கோரி ஜெனீவா செல்ல வேண்டும் என சில அதிகாரிகள் நினைக்கின்றார்களா? உதுமாலெப்பை

0
302

(பாலமுனை விசேட நிருபர்)

எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் அதிகாரிகள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சிணைகளை இலகுவாக தீர்த்து வைப்பதற்கான மன நிலையில் வனவள உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும் இல்லையெனில் மக்கள் ஜெனீவா சென்று இவைகளை முறையிட வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்களா என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் ஏ.எம் மஜீட் தலைமையில் (13) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வட, கிழக்கில் கடந்த 30வருடகாலமாக நிகழ்ந்த கொடூர யுத்தத்தினால் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த காணிகளுக்குள் எமது மக்கள் செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. குறிப்பாக எமது மக்களின் பாரம்பரிய நீர்ப்பாசன அனைக்கட்டுக்களை திருத்துவதற்குக்கூட வன விலங்கு திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்ற புதிய நிலைமையை சில அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் வேங்காமம், பள்ளியான் வட்டை, துக்வல்ல, தகரம்பளை, கனகர் கிராமம், கோமாரி காணிகளை விவசாயம் செய்வதற்கு வன அதிகாரிகள் தடையாக இருப்பது தெரிய வருகிறது. கனகர் கிராமம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்களினால் 60ஆம் கட்டையில் உருவாக்கப்பட்ட கிராமமாகும். இப்பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் வாழ்ந்ததனை எல்லோரும் அறிவோம். இப்போதும்கூட அங்கு அவ்வீடுகள் உள்ளன.

மேற்படி கிராமத்தில் 30வருட கால யுத்தத்தினால் சிறிய காடுகள் வளர்ந்துள்ளது எனவே மனிதாபிமான முறையில் இக்காணிகள் விடுதலை செய்யப்பட்டு இம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் கொழும்பிலிருந்து வரும் வனவள உயர் அதிகாரிகளுக்கு அம்பாரை மாவட்ட மக்களின் விவசாயக் காணிகளின் வரலாறு தெரியாது

எனவே மாவட்ட உயர் அதிகாரிகள் உண்மையான நிலையினை தெளிவுபடுத்தி இம்மக்களின் காணிகளை விடுதலை செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Attachments area

LEAVE A REPLY