தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக எனும் நிகழ்வு-நாளை மறுதினம் மட்டக்களப்பில்

0
220

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(IWPR) -போர் மற்றும் சமாதானத்தை அறிக்கையிடும் சர்வதேச நிறுவனத்தின் அனுசரனையுடன் தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக எனும் நிகழ்வு எதிர்வரும் 18-10-2016 செவ்வாய்க்கிழமை நாளை மறுதினம் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை மட்டக்களப்பு உப்போடை ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

மேற்படி சர்வதேச நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான திட்ட முகாமையாளர் சட்டத்தரணி முஹம்மது அஷாட் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகவும் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.ஜெ.யாகொட ஆராச்சி கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இங்கு தகவல் அறியும் உரிமை தொடர்பான கருத்துரைகளை சட்டத்தரணி ஜெகத் லியன ஆராச்சி, சட்டத்தரணி கே.ஐங்கரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு,கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியம்,திருமலை மாவட்ட முஸ்லிம் வாலிபர் ஒன்றியம்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY