யானை வெடி வெடித்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0
226

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லைகளை தடுப்பதற்காக வெடி பொருற்களை பயன்படுத்தி யானைகளை விரட்ட முற்பட்ட போது யானை வெடி வெடித்ததில் நேற்றிரவு (15) இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-கன்தளாய் பிரதான வீதியிலுள்ள மங்கிபிரிச் இராணுவ முகாமிற்கு அருகில் வந்த யானையை விரட்டுவதற்காக பயன்படுத்திய யானை வெடி பொருள் கையில் வெடித்ததில் அம்முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரான எம்.டபிள்யூ.டி.குமார சன்ன ஜயரத்ன (31வயது) படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை சேறுநுவர பொலிஸ் பிரிவுற்குற்பட்ட கல்லாறு. புபுது புர பகுதியில் வீட்டுக்கு அருகில் வந்த யானையை விரட்ட பயன்படுத்திய வெடி வெடித்ததில் இரண்டு கைகள் மற்றும் கண்ணொன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY