சிவில் சமூகத்தினரது ஏட்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

0
133

(அப்துல்சலாம் யாசீம்)

போதையற்ற நாட்டை உருவாக்க கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் எனும் ஜனாதிபதி மைத்திரிபால பால சிறிசேனவின் நோக்கத்திற்கிணங்க நேற்று (15/10/2016) அன்புவெளிபுரம் சிவில் சமூகத்தினரது ஏட்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது

தொடர்ந்து இரண்டாவது வருடமாக முன்னெடுக்கப்பட்ட இவ் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இனறு மாலை விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கலைமகள் வித்தியாலயத்தில் தொடங்கிய குறித்த பேரணியானது காந்திநகர், கண்டிவீதி கன்னியா வீதி ஊடாக சென்று மீன்றும் பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த பேரணியில் அன்புவழிபுரம் சிவில் சமூகத்தினர், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோககத்தர் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் பிரதம விருந்தினராகவும் சுகாதார வைத்திய அதிகாரி Dr.விஜயகுமார் அவர்களும் கலந்துகொண்டனர்

மேலும் அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களால் போதைப்பொருள் பவனையினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY