சமூகத்தின் மீது அக்கரை கொண்ட இளைஞர்களிடம் இருத்து ஆலோசனைகளை அதிகமாக எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு

0
322

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

King of batti முகநூல் பக்கம்  வெள்ளிக்கிழமை இரவு 14.10.2016 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களினது ஒன்றினைத்த முயற்சியாக மாற்றத்திற்கான பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைதலைமையும் சட்டதரணியுமான கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் திருக்கரத்தால் இம் முகநூல் பக்கம் பிரதேச இளைஞா்களது பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் “அரசியல் என்ற விடயம் மக்களுக்காக மக்களின் தலைவர்களால் ஆற்றப்படும் உன்னத செயற்பாடாகும் இதில் சிலர் தவறாக வழிகாட்டப்படுகின்றனர் இதனால் அவா்கள் நிலைமாறி செல்வார்கள் இதன் போது சமூகத்தின் மீது அக்கரையும் அன்பும் கொண்டுள்ளவர்கள் தாமும் தமது பாடும் என்று இருத்து விடாமல் இதற்கு வழிகாட்டுவது கட்டாய கடமையாகும்.

தொடர்ந்தும் தமது கருத்துக்களை தெரிவித்த பிரதியமைச்சர் “இவர் அமைச்சர் இவருக்கு நாம் எப்படி ஆலோசனை கூற முடியும் என்று சிலர் ஆக்க பூர்வமான சிந்தனைகளையும் அவர்களின் சமூக பணியினையும் மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்க செய்ய முடியாமல் அதற்கான வாய்ப்புக்களையும் இழந்து நிற்கின்றனர்.

அமைச்சர் அமீர் அலியும் உங்களை போன்ற மனிதர்தான் அவரிடமும் அன்பு பாசம் சமூகத்தின் மீதான அதித அக்கரை எல்லாம் உண்டு சமூக மறுமலர்ச்சிக்கான விடயம் என்று ஒரு விடயத்தை நாம் முன்னொடுக்கும் போது அது வெற்றி பெறவும் நீடிந்து நிலைத்து நிக்கதக்கதான அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல்வதற்கு பொறுமதிமிக்க மனிதர்களினதும் நவீன கால சூழல்களுக்கும் உல மாற்றங்களுக்கும் ஏற்பவும் எமது பாரம்பறியங்களுக்கு ஏற்பதான அபிவிருத்தி பணிகளை நாம் முன்கொண்டு செல்வதற்கும் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட இளைஞர்களிடம் இருத்து ஆலோசனைகளை தாம் அதிகமாக எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY