மட்டக்களப்பில் மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவு

0
113

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாநகரில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கவன ஈர்ப்பு போராட்டம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
உழைப்பு, உரிமை மற்றும் உணர்விற்கு மதிப்பளிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் எதிரே நடைபெற்ற மலயைக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இந்த கவன ஈர்ப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஷ்ணபிள்ளை ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையிலமைச்த துண்டுப் பிரசுரம் ஒன்றும் அங்கு விநியோகிக்கப்பட்டது.

dsc_0729 dsc_0732

LEAVE A REPLY