யுனெஸ்கோவோடு ஒத்துழைப்பை நிறுத்தியது இஸ்ரேல்

0
188

பழைய ஜெருசலேம் நகரத்திலுள்ள புனித இடங்களில் தங்களுக்குள்ள தொடர்பை மறுப்பதாக இஸ்ரேல் கூறுகின்ற ஒரு தீர்மானத்தை யனெஸ்கோ நிறைவேற்றியதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனத்தோடு தன்னுடைய ஒத்துழைப்புக்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

யுனெஸ்கோவால் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தில், அந்த புனித இடத்திற்கு முஸ்லிம் பெயரான த ஹராம் அல்-ஷாரிஃப் என்பது பயன்படுத்தப்படுகிறது. யூதர்களுக்கு இவ்விடம் தேவாலய மலை என்று அறியப்படுகிறது.

அவ்விடத்திலுள்ள முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என்று அது விவரித்திருப்பதை யுனெஸ்கோவின் அறிக்கை கண்டித்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஜெருசலேத்தோடு யூதர்கள் கொண்டுள்ள தொடர்ப்பை கண்டுகொள்ளாமல் இந்த அமைப்பு இஸ்லாமியவாத பயங்கரவாதத்திற்கு துணைபோயுள்ளது என்று இஸ்ரேல் கல்வி அமைச்சர் நாஃப்தாலி பென்னட் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY