டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதமடித்த நான்காவது பாகிஸ்தான் வீரர் எனும் சிறப்பை அசார் அலி பெற்றார்

0
223

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதமடித்த நான்காவது பாகிஸ்தான் வீரர் எனும் சிறப்பை அசார் அலி பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக அசார் அலி முச்சதத்தைப் பூர்த்திசெய்தார்.

469 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 ஆறு ஒட்டங்களையும், 23 4 ஓட்டங்களையும் பெற்று 302 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 579 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.

பதிலளித்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை நேற்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

LEAVE A REPLY